- செந்சந்தனத் தூள் 18 gm ,
- வெண்மிளகு 18 gm
- மரமஞ்சள் 18 gm
- நிலப்பனைக் கிழங்கு 18 gm
- வெட்டிவேர் 18 gm
- விலாமிச்சு வேர் 18 gm
- மயில்மாணிக்கச்சார் 1/4 படி
- சிறுகீரைச்சாறு 1/4 படி
- கையான்தகரைச்சாறு 1/4 படி
- பொன்னாங்கண்ணிச் சார் 1/4 படி
- முசுமுசுக்கைச்சாறு 1/4 படி
- நல்லெண்ணெய் 1/4 படி
முன்கூறிய சரக்குகள் யாவும் இடித்துப் பொடித்து வஸ்திரகாயம் செய்து சாறு வகைகளுடன் சேர்த்து எண்ணையும் சேர்த்து கலந்து அடுப்பேற்றி மெழுகுபதமாய்காய்ச்சி வடிகட்டி 4 நாளைக்கு ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வர மயிர் உதிர்வதை நிறுத்தும்.ஆழம் விழுது போல் கூந்தல் வளரும்.தேகம் வெகு குளிர்ச்சியாக இருக்கும்.திடகாத்திரமுண்டாகும்.


